சிகரம் தொட்ட சன் டிவி சீரியல்… புதிய சாதனைக்கு ரசிகர்கள் வாழ்த்து !

by Column Editor

சன் டிவியின் ரோஜா சீரியல் ஆயிரம் எபிசோடுகளை தொட்டு சாதனை படைத்துள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் தற்போது நல்ல டி.ஆர்.பி பெற்று வருகிறது. குறிப்பாக ரோஜா சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியல் முதல் இடத்தை பிடித்து விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. அனாதையான ஹீரோயினுக்கும், பணக்கார ஹீரோவுக்கும் இடையே நடைபெறும் காதல் கதையை மையமாக வைத்து இந்த சீரியல் நகர்கிறது.

தினத்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகும் இந்த சீரியல் இல்லத்தரசிகளிடையே மிகவும் பிரபலம். இந்த சீரியலில் சிபு சூர்யன் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் பிரியங்கா நல்கார், வெங்கட் ரங்கநாதன், ஷாமிலி சுகுமார், காயத்ரி சாஸ்திரி, வடிவுக்கரசி, சிவா, ராஜேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

காதல், ரொமென்ஸ், அதிரடி, ஆக்ஷன் என நகரும் இந்த பல்வேறு அதிரடி திருப்பங்களுடன் சென்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியல் ஆயிரம் எபிசோடுகளை தொட்டுள்ளதாக சன் டிவி அறிவித்துள்ளது. சாதனை படைத்துள்ள ரோஜா சீரியல் குழுவினருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment