இந்த வார டாப் 10 சீரியல் லிஸ்ட்..

by Editor News

டாப் 10 டிஆர்பி பட்டியலில் விஜய் டிவியில் புதிதாக தொடங்கப்பட்ட ஆஹா கல்யாணம் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ஆகிய சீரியல்கள் கடைசி இரண்டு இடங்களை பிடித்துள்ளன. குறிப்பாக 10வது இடத்தில் உள்ள ஆஹா கல்யாணம் சீரியலுக்கு 5.51 டிஆர்பி புள்ளிகளும், 9ம் இடத்தில் உள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலுக்கு 6.20 டிஆர்பி புள்ளிகளும் கிடைத்துள்ளன. இதற்கு அடுத்தபடியாக சன் டிவியின் மல்லி சீரியல் 6.31 புள்ளிகளுடன் 8ம் இடத்தை பிடித்துள்ளது.

கடந்த வாரம் 6-ம் இடம்பிடித்த பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம் 6.45 டிஆர்பி புள்ளிகளுடன் 7-ம் இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. அதேபோல் சன் டிவியில் கேப்ரியல்லா நடிப்பில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியல் கடந்த வாரத்தை காட்டிலும் 3 இடம் முன்னேறி 6.48 டிஆர்பி புள்ளிகளுடன் 6ம் இடத்தில் உள்ளது. அதேபோல் கடந்த வாரம் 5-வது இடத்தில் இருந்த வானத்தைப் போல சீரியல், இந்த வாரமும் 7.68 புள்ளிகளுடன் அதே இடத்தை தக்கவைத்து உள்ளது.

இதற்கு அடுத்தபடியாக நான்காம் இடத்தில் கடந்த வாரம் எதிர்நீச்சல் சீரியல் இருந்த நிலையில், கிளைமாக்ஸ் வாரத்தில் 7.84 டிஆர்பி புள்ளிகளுடன் 3 இடத்துக்கு முன்னேறியதோடு, கடந்த சில வாரங்களாக 3ம் இடத்தில் நீடித்து வந்த விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலை நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. அதற்கு 7.70 புள்ளிகள் கிடைத்துள்ளன. முதல் இரண்டு இடங்களை வழக்கம்போல் சன் டிவியின் டாப் 2 சீரியல்களான சிங்கப்பெண்ணே மற்றும் கயல் ஆகிய சீரியல்கள் ஆக்கிரமித்துள்ளன. இதில் கயல் சீரியலுக்கு 8.65 டிஆர்பி புள்ளிகளும், சிங்கப்பெண்ணே சீரியலுக்கு 9.57 டிஆர்பி புள்ளிகளும் கிடைத்துள்ளது.

Related Posts

Leave a Comment