ஆவியாக வந்த இந்து; பீதியில் மனோகரி..

by Editor News

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சுடரின் அப்பா வீட்டிற்கு வந்திருந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, சுடரின் அப்பா இந்து இருந்த ஹாஸ்பிடல் வார்டன் வந்து சந்திப்பதாக சொல்லி இருப்பதாக சொல்ல அக்கா சீக்கிரம் கிடைச்சிடுவா என்று சுடர் சொல்கிறாள். இதையடுத்து இந்து குழந்தைகளுக்கு தெரியாமல் விளையாடி கொண்டிருக்கும் குழந்தைகளிடம் நேரத்தை செலவிடுகிறாள். இந்த நேரம் பார்த்து மனோகரி அங்கு வந்து உட்காருகிறார்.

சுடர் பக்கத்திலேயே அமர்ந்து அவளை முறைத்தபடி உட்கார்ந்திருக்க மனோகரிக்கு இந்து அங்கு உட்கார்ந்திருப்பதை போல் தோன்றுகிறது. இதையடுத்து பயந்து போய் வெளியே வருகிறாள் மனோகரி செல்வியிடம் விஷயத்தை சொல்கிறாள். செல்வி எனக்கு தெரிந்த ஒரு சாமியார் இருக்கிறார்.

அவரை வீட்டுக்கு வர வைக்க ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்ல மறுநாள் சாமியாரும் வீட்டிற்கு வருகிறார். ஆனால் போலி சாமியாரான அவர் வீட்டில் உள்ள பொருட்களை திருடும் வேலைகளை செய்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ் பண்ணாம பாருங்க.

Related Posts

Leave a Comment