பரணியோட பிணம் ஆத்துல மெதக்குது… அழுது புலம்பிய இசக்கி; அதிர்ச்சியில் செளந்தரபாண்டி..

by Editor News

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் செல்வம் பரணியை கடத்திய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது சண்முகமும் மற்றவர்களும் பரணியை தேடி அலைகின்றனர். ஆனால் இது எதையும் பெருசாக கண்டு கொள்ளாத சௌந்தரபாண்டி பாக்கியம் சாப்பாடு போட சொல்ல அவள் பொண்ணை காணோம்னு தேடிட்டு இருக்கோம், உங்களுக்கு சாப்பாடு கேக்குதா என்று திட்டுகிறாள்.

உடனே சௌந்தரபாண்டி மனதுக்குள் பொண்ணு எங்க இருக்கானு எனக்கு தானே தெரியும் என்று சொல்லி சிரித்து கொள்ள இதை இசக்கி நோட் பண்ணி விடுகிறாள், பிறகு ஷண்முகத்திற்கு போன் செய்து அண்ணா எனக்கு என்னமோ சௌந்தரபாண்டி மாமா மேல சந்தேகமாக இருக்கு, பொண்ணை காணோம்னு அவருக்குள்ள கொஞ்சம் கூட கவலை இல்லை என்று சொல்கிறாள்.

இதையடுத்து ஷண்முகம் ஐடியா ஒன்றை சொல்ல இசக்கி பரணியோட பிணம் ஆத்துல மிதக்குதாமே என்று அழுது புலம்ப சௌந்தரபாண்டி அதிர்ச்சி அடைகிறார். முத்துபாண்டியை தனியாக அழைத்து சென்று ஏ.கே.எஸ் அண்ணாச்சிக்கு போனை போட சொல்கிறார். பிறகு அவரிடம் பரணி குறித்து விசாரித்து அவள் பாதுகாப்பாக இருப்பதை தெரிந்து கொள்ள சிவபாலன் மறைந்திருந்து இதை பார்த்து விடுகிறான்.

இசக்கியிடம் சிவபாலன் உண்மையை சொல்ல அவள் ஷண்முகத்திற்கு தகவல் கொடுக்கிறாள். மறுபக்கம் செல்வம் பரணிக்கு மயக்க மருந்து கலந்த ஜூஸை கொடுக்க அவள் குடிக்க மறுத்து ஷண்முகம் என்று கத்த ஷண்முகம் என்ட்ரி கொடுத்து ஏ.கே.எஸ் அண்ணாச்சி மற்றும் செல்வத்தை அடித்து துவைத்து பரணியை காப்பாற்றுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

Related Posts

Leave a Comment