முதல் நாளே வசூலில் 200 கோடியை நெருங்கிய கல்கி 2898 AD.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

by Lankan Editor

கல்கி 2898 AD
பிரபாஸ் – நாக் அஸ்வின் இருவரும் முதல் முறையாக இணைந்துள்ள திரைப்படம் கல்கி 2898 AD. இப்படத்தை வைஜெந்தி நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து கமல் ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். புராண கதையோடு சேர்த்து Sci-fi திரைப்படமாக இப்படத்தை எடுத்துள்ளனர்.

பிரமாண்ட பொருட் செலவில் எடுக்கப்பட்டு வெளியான இப்படம் நேற்று திரையரங்கில் வெளிவந்த நிலையில், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

முதல் நாள் வசூல்

இந்த நிலையில், கல்கி 2898 AD திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 191.5 கோடி வரை வசூல் செய்துள்ளது.

இதன்மூலம் முதல் நாளே ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த ஐந்து திரைப்படங்களை கொண்டுள்ளார் நடிகர் பிரபாஸ். ஆம், பாகுபலி 2, சாஹோ, ஆதி புருஷ், சலார் மற்றும் கல்கி 2898 AD என பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த இந்த ஐந்து திரைப்படங்களும் முதல் நாளே ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்கி 2898 AD திரைப்படம் முதல் நாளே ரூ. 191.5 கோடி வரை வசூல் செய்துள்ள நிலையில், இப்படம் ரூ. 1000 கோடி பாக்ஸ் ஆபிஸை தொடும் என திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. மேலும் பிரபாஸின் முந்தைய படமான சலாரின் மொத்த வசூலான ரூ. 620 கோடியையும், கல்கி 2898 AD முதல் வாரத்திலேயே கடந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment