திருப்பதி சென்றுள்ள நடிகர் அஜித்… பிரபலத்தை கண்டதும் ரசிகர் செய்த செயல், வைரலாகும் போட்டோ

by Lankan Editor

அஜித் படம்
துணிவு படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் நடித்துவரும் திரைப்படம் தான் விடாமுயற்சி. மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தான் தயாரித்து வருகிறது.

படத்திற்கான படப்பிடிப்பு அஜர்பைஜானில் தான் அதிகம் நடந்து வந்தது, இப்போது இடைவேளை விடப்பட்டுள்ளது. இந்த கேப்பில் அஜித் தான் அடுத்து கமிட்டாகியிருக்கும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பை தொடங்கிவிட்டார்.

இம்மாத இறுதியில் விடாமுயற்சி படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

ரசிகரின் பரிசு

இந்த நிலையில் நடிகர் அஜித் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அங்கு அஜித்தை கண்ட ரசிகர் ஒருவர் பெருமாளின் சிலையை பரிசாக கொடுத்துள்ளார்.

அந்த ரசிகர் அஜித்தை கண்டதும் திடீரென பெருமாள் சிலையை வாங்கி பரிசளித்தாரா அல்லது முன்பே வாங்கி வைத்திருந்தாரா என்று தெரியவில்லை.

அவர் அஜித்திடம் பரிசு கொடுக்கும் போது எடுக்கப்பட்ட போட்டோ இப்போது வைரலாகி வருகிறது.

 

Related Posts

Leave a Comment