போஸ்டர் பார்த்து ஷாக்கான கவுதம் மேனன், அன்பு செல்வனாக நடிக்கிறேனா?

by Column Editor

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் கவுதம் மேனன், தான் நடிப்பதாக வந்த போஸ்டருக்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.

கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘காக்க காக்க’. இப்படத்தில் சூர்யா கதாபாத்திரத்தின் பெயர் அன்புசெல்வன். இந்த பெயரில் கவுதம் மேனன் நடிப்பதாக போஸ்டர்கள் சமூக வலைத்தளத்தில் வெளியானது. பலரும் கவுதம் மேனனுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

இந்த போஸ்டரை பார்த்த கவுதம் மேனன், இது என்ன படமென்று எனக்குத் தெரியாது என்று பதிவு செய்து இருக்கிறார். ‘அன்புசெல்வன்’ படம் தொடர்பாக கவுதம் மேனன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

இது எனக்கு அதிர்ச்சியான செய்தியாக இருக்கிறது. நான் நடிப்பதாகக் கூறப்படும் இந்தப் படம் பற்றி என்று எதுவும் தெரியாது. இந்த போஸ்டரில் பெயர் போட்டிருக்கும் இயக்குனரை எனக்குத் தெரியாது. அவரை நான் சந்திக்கவும் இல்லை. தயாரிப்பாளருக்கு இதை ட்வீட் செய்ய பிரபலமான பெயர்கள் கிடைத்துள்ளன. இது போன்ற ஒன்றை மிக எளிதாகச் செய்ய முடியும் என்பது அதிர்ச்சியாகவும் பயமாகவும் இருக்கிறது” என்றார்.

Related Posts

Leave a Comment