பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ முதல் சிங்கிள் வெளியீடு

by Column Editor

பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பாகுபாலி நாயகன் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ராதே ஷ்யாம்’. பிரபாஸின் பான் இந்தியா திரைப்படங்களில் ஒன்றான இந்த படத்தை ராதா கிருஷ்ணகுமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்தை யூவி கிரியேசன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.

ஐரோப்பாவில் நடக்கும் முந்தைய காலத்தைச் சேர்ந்த காதல் கதையாக இப்படம் உருவாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் பான் இந்தியா தயாராகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல பெற்றுள்ளது. படப்பிடிப்பு முடிந்துள்ள இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஜஸ்டின் பிரபாகரன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் நேற்று வெளியானது. ‘அகோழிலியே’ என்று தொடங்கும் இந்த பாடலை மதன் கார்க்கி எழுத, யுவன் சங்கர் ராஜா மற்றும் ஹரிணி இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடலுக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்த‌ படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14-ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment