புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் நடிகர் விஜய் சேதுபதி அஞ்சலி

by Column Editor

கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த வாரம் மாரடைப்பால் காலமானார். ரசிகர்கள் பலரும் கண்ணீருடன் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் புனித் ராஜ்குமாரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யபட்டது.

இந்நிலையில் பெங்களுருவில் உள்ள நடிகர் ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு சென்று பல பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சமீபத்தில் தமிழ் சினிமா நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் சூர்யா உள்ளிட்டோர் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பெங்களூர் சென்றிருந்த நடிகர் விஜய் சேதுபதி, புனித ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும், புனித் ராஜ்குமாரின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment