Cooku With Comali Season 3…நீங்க வேற லெவல் ல வருவீங்க தர்ஷன்…
Column Editor
பாரதி கண்ணம்மா சீரியலில் புது ஹீரோவாக களமிறங்கும் பிக்பாஸ் பிரபலம்… யார் தெரியுமா?
பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வரும் அருண் பிரசாத் விரைவில் விலக உள்ளதாக கூறப்படுகிறது, இதனால் அடுத்த பாரதியாக யார் நடிக்கப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்த வண்ணம் உள்ளது.
சினிமா பிரபலங்களை விட சின்னத்திரை பிரபலங்களுக்கு மக்கள் மத்தியில் அதிக மவுசு உண்டு. சீரியல்கள் தினந்தோறும் ஒளிபரப்பப்படுவதால் அதில் நடிக்கும் நடிகர், நடிகைகளை தங்கள் வீட்டில் ஒருவராக மக்கள் பார்த்து வரும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த தொடர்களில் பாரதி கண்ணம்மா சீரியலும் ஒன்று.
கடந்தாண்டு வரை டி.ஆர்.பி.யில் முதலிடத்தில் இருந்த இந்த தொடர், அதிலிருந்து அடுத்தடுத்து முக்கிய நடிகர், நடிகைகள் விலகியதன் காரணமாக கடும் சரிவை சந்தித்தது. குறிப்பாக இதில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினிக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இருந்தது. அவர் விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக வினுஷா என்பவர் தற்போது கண்ணம்மாவாக நடித்து வருகிறார்.
இதனிடையே இதில் பாரதியாக நடித்து வரும் அருண் பிரசாத்தும் விரைவில் விலக உள்ளதாக கூறப்படுகிறது, இதனால் அடுத்த பாரதியாக யார் நடிக்கப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பரும், பிக்பாஸ் பிரபலமுமான சஞ்சீவ், பாரதியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே பல்வேறு சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் என்பதால் அவர் இந்த தொடருக்கு பொருத்தமாக இருப்பார் எனக் கருதி ஒப்பந்தம் செய்துள்ளனர். அவரின் வருகைக்கும் பின் அந்நிகழ்ச்சியின் டி.ஆர்.பி மீண்டும் டாப்புக்கு வருமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
செவ்வாய்க் கிழமையில் பிறந்தவர்கள், வம்பு சண்டைக்குப் போக மாட்டார்கள். வந்த சண்டையை விடவும் மாட்டார்கள். இக்கிழமையில் பிறந்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்று புராணங்கள் கூறுகின்றன.
ஜாதகத்தில், செவ்வாயின் பலத்தை பொறுத்தே நீதிபதிகள், ராணுவ தளபதிகள், காவல்துறையினர், பொறியியல் வல்லுனர்கள், அரசியல் தலைவர்களுக்குரிய செல்வாக்கு அமையும்.
ரத்தத்திற்கும் செவ்வாயே அதிகாரி. ரத்த ஓட்டம் ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக உள்ளது. செவ்வாயை வழிபட்டால் ரத்த அழுத்தம், உஷ்ணம், கோபத்தில் இருந்து விடுதலை பெறலாம்.
செவ்வாய் கிழமைக்கு என்று ஒரு வேகம் உண்டு. செவ்வாய்கிழமை அன்று பரிகாரம் செய்தால் அதற்கு பலன் கிடைக்கும். அன்று ஒரு பொழுது விரதம் இருந்து வந்தால் ஒன்பது வாரத்தில் உங்களுக்கு நல்லது நடக்கும்.
வியாபாரம் செய்பவர்கள் கண்டிப்பாக செவ்வாய் வழிபாட்டை செய்து வந்தால் வியாபாரம் பெரிய அளவில் விருத்தி செய்யலாம். நல்ல தைரியத்தை கொடுத்து நாம் எடுத்து வைக்கும் எல்லா வியாபாரமும் வெற்றியை தரும்.
செவ்வாய்க் கிழமை தோறும் காலையில் குளித்து அருகில் உள்ள முருகப் பெருமான் ஆலயத்துக்குச் சென்று வழிபட வேண்டும். பிறகு வீட்டுக்கு திரும்பியதும் வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி, விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
மெளன ராகம் 2 சீரியலில் சத்யா இனி வருணுடன் சேர போவதாக இல்லை.
மெளன ராகம் 2 சீரியலில் சத்யா சொன்ன மொத்த உண்மையால் மனோகர் குடும்பம் அவரை வெறுத்து விட்டது. சத்யாவின் கணவராக வருண் அடுத்து என்ன முடிவு எடுப்பார்? என்பது தான் இப்போது ரசிகர்களின் அடுத்த கேள்வியாக இருக்கிறது.
மெளன ராகம் 2 சீரியலில் கடந்த வாரம் முழுவதும் பரபரப்பான திருப்பான திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. குழந்தை அணு தொலைந்து போக, அந்த குழந்தையை கடத்த சொன்ன காதம்பரி அம்மா சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். அவர் தான் குற்றவாளி என தெரிந்தும் சத்யா, அவரை காப்பாற்றுகிறார். அங்கு தொடங்கியது பிரச்சனை, இனிமேல் தன்னால் அந்த குடும்பத்திற்கு எந்த பிரச்சனையும் வேண்டாம் என நினைத்த சத்யா, அவர்கள் வீட்டை விட்டு கிளம்புகிறார்.
இந்த நேரம் பார்த்து தான், மனோகர் வீட்டுக்கு போன டிஜிபி சத்யா பற்றி வருணிடம் சொல்கிறார். சத்யாவை ஏற்றுக் கொள்ள வருண் முடிவு செய்கிறார். ஆனால் சத்யா இனி வருணுடன் சேர போவதாக இல்லை. அதே போல், கார்த்திக் கிருஷ்ணாவிடமும் பேசுவதாக இல்லை. ஊருக்கு போய் மல்லிகாவை பார்க்க வேண்டும் என முடிவு செய்கிறார். ஆனால் சத்யாவையும் வருணையும் சேர்த்து வைக்க மனோகர், ஷீலா, தருண் எல்லோரும் முயற்சி செய்கிறார்கள்.
சத்யாவை ஃபாலோ செய்து தடுத்து நிறுத்துகிறார் வருண். அப்போது கார்த்திக் கிருஷ்ணா தான் தன்னுடைய அப்பா என்ற உண்மையை சத்யா சொல்ல மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்து போகிறார்கள். மனோகர் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. எல்லாவற்றையும் சொல்லிவிட்டு சத்யா அங்கிருந்து கிளம்புகிறார். வீட்டுக்கு போகும் மனோர், சத்யா பற்றி உண்மையை காதம்பரிடம் சொல்கிறார்.
அவ்வளவு தான் இன்றைய எபிசோடில் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும் காதம்பரி கார்த்திக்கிடம் போய் சண்டை போடுகிறர். ஆனால் கார்த்திக் சத்யா தான் என மகள் என உறுதியா சொல்கிறார். இந்த பிரச்ச்னைக்கு நடுவில் வருண் செய்வதறியால நிற்கிறார். வருண் என்ன முடிவு எடுப்பார்? என்பது தான் இப்போது சீரியலின் ஹைலைட். சத்யாவை மீண்டும் போய் அழைத்து வருவாரா? என்பது வரும் வார எபிசோடில் தான் தெரிய வரும்.
இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 1,345 புள்ளிகள் உயர்ந்தது.
இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் குறித்த எதிர்பார்ப்புகள் காரணமாக இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட 30 நிறுவன பங்குகளின் விலையும் உயர்ந்தது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,627 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 713 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 122 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.255.62 லட்சம் கோடியாக உயர்ந்தது.
இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,344.63 புள்ளிகள் உயர்ந்து 54,318.47 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 417.00 புள்ளிகள் அதிகரித்து 16,259.30 புள்ளிகளில் முடிவுற்றது.
துருவ பகுதிகளில் 24 மணி நேரத்துக்கும் மேலாக இரவு நீடிப்பதை துருவ இரவு (Polar night) என அழைப்பார்கள். அந்த வகையில், தற்போது தென் துருவத்தில் உள்ள அண்டார்டிகாவில் நீண்ட இரவு( Long night) தொடங்கியுள்ளது.
நீண்ட இரவு எனப்படும் Long night அண்டார்டிகா கண்டனத்தில் துவங்கியுள்ளது. இதன் காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு அண்டார்டிகாவில் சூரிய உதயம் இருக்காது. கண்டம் முழுவதும் இருள் மட்டுமே இருக்கும்.
பூமியிம் அமைப்புக்கு ஏற்ப தென் துருவம் மற்றும் வட துருவத்தில் மிகவும் குளிர் அதிகமாக இருக்கும். குளிர் காலத்தில் இங்கு கடல் உட்பட அனைத்து நீர்நிலைகளும் பனிகட்டிகளாக மாறிவிடும். உலகில் பிற பகுதிகளில் குளிர்காலம், வசந்த காலம், கோடை காலம், இளையுதிர் காலம் என 4 காலங்கள் இருந்தாலும், துருவப் பகுதியை பொறுத்தவரை இரண்டே காலங்கள்தான்.
ஒன்று நீண்ட குளிர் காலம். இந்த காலத்தில் துருவப் பகுதி முழுவதுமே பனி போற்றியபடி காணப்படும். எலும்புகளை உறையவைக்கும் அளவுக்கு பனி இருக்கும். அடுத்தது கோடைகாலம். கோடை காலத்திலும் உலகின் பிற பகுதிகளை விட துருவபகுதிகளில் பனி சூழ்ந்தே காணப்படும். குளிர்காலம் அளவு கடுங்குளிர் இருக்காது என்பதுதான் வித்தியாசம்.
துருவ பகுதிகளில் 24 மணி நேரத்துக்கும் மேலாக இரவு நீடிப்பதை துருவ இரவு (Polar night) என அழைப்பார்கள். அந்த வகையில், தற்போது தென் துருவத்தில் உள்ள அண்டார்டிகாவில் நீண்ட இரவு( Long night) தொடங்கியுள்ளது. அங்கு கடைசியாக மே 13ம் தேதி சூரியன் உதித்து மறைந்தது. இதனையடுத்து அடுத்த 4 மாதங்களுக்கு அங்கு சூரியன் உதிக்காது. எங்கும் இருள் மட்டுமே இருக்கும்.
சூரியன் தொடுவானத்திலிருந்து 12 முதல் 18 டிகிரிக்கு கீழேயிருக்கும் போது வானியல்சார் துருவ இரவு ( Astronomical polar night) உண்டாகிறது. வட துருவத்தில் நவம்பர் 13 முதல் ஜனவரி 29 வரையும், தென் துருவத்தில் மே 11ம் தேதி முதல் ஆகஸ்ட் 1ம் தேதிவரி சூரியன் இருக்காது. ஐரோப்பாவின் கான்கார்டியா ஆராய்ச்சி நிலையத்தில் 12 ஆய்வாளர்களை கொண்ட குழுவினர் இந்த 4 மாதங்கள் அங்கு தங்கியிருந்து ஆராய்ச்சி மேற்கொள்ளவுள்ளனர்.
சன் டிவி சீரியல்கள் தான் தற்போது டிஆர்பியில் முன்னணியில் இருந்து வருகின்றன. மேலும் விஜய் டிவி தொடர்கள் அதற்கு ஈடு கொடுக்க முடியாமல் ரேட்டிங்கில் தொடர்ந்து சறுக்கி வருகின்றன. இதை சமாளிக்க விஜய் டிவி புது சீரியல்கள் சிலவற்றை சமீபத்தில் களமிறக்கி இருக்கிறது.
இந்நிலையில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 சீரியல் விரைவில் முடியப்போகிறது என தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது.
ராதிகா தயாரித்து வரும் இந்த தொடரில் அவரே முதலில் நடித்து வந்தார், ஆனால் அவர் இடையில் விலகிவிட்டார். தற்போது அவர் கலைஞர் தொலைக்காட்சிக்காக பொன்னி C/o ராணி என்ற சீரியலை எடுத்து வருகிறார். அந்த சீரியல் அடுத்த மாதம் முதல் ஒளிபரப்பாகிறது.
இந்த நிலையில் தான் சித்தி 2 கிளைமாக்ஸ் விரைவில் வருகிறது என தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த தகவல் சன் டிவி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது.
எதிர்பார்க்காத நேரத்தில் இந்த சீரியல் முடிவுக்கு வருகிறதே என பலரும் வருத்தத்தை கூறி வருகின்றனர்.
தமிழ்க்கடவுளான முருகப் பெருமான் செவ்வாய்க்குரியவர். இவரை வணங்கி துவங்கும் செயல்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை.
செவ்வாயையும், முருகப்பெருமானையும், பூமாதேவியையும் வழிபட்டு செவ்வாயில் மங்கலப் பொருள் வாங்கினால் பன்மடங்கு பெருகுவதோடு, எல்லாச் சிறப்புகளும் நம்மைத் தேடி வரும்.
நவக்கிரகங்களில் ஒருவரான செவ்வாய்க்கு ‘மங்களன்’ என்றும் பெயருண்டு. செவ்வாயன்று முருகனை வழிபட்டால் சகோதர ஒற்றுமையும், திருமணத்தடையும் நீங்கும்.
வீரத்தின் நாயகன் செவ்வாய்க்கு உகந்த நாள் செவ்வாய்க்கிழமை. புனிதமான இந்த கிழமையைத் தான் பலரும் விரதமிருக்க தேர்ந்தெடுப்பது. முருகனுக்கும், அம்மனுக்கும் உகந்த கிழமை செவ்வாய்.
தமிழ்நாட்டில் செவ்வாய் கிழமையில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதில்லை, பொருட்கள் வாங்குவதில்லை என்று வழக்கம் இருக்கிறது. உண்மையில் இந்தக் கிழமை மங்களகரமானது, சிறப்புக்குரியது.
செவ்வாய்க்கு மங்களன், பூமிகாரகன் என்று பெயர் உண்டு. பெயரிலேயே மங்களம் இருப்பதால், அந்நாளில் தொடங்கும் செயல் சுபமாக நிறைவேறும். ஒருவர் வீடு கட்ட வேண்டுமென்றால் செவ்வாய் கிரகத்தின் அனுகூலம் இருக்கவேண்டும்.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐபிஎல் வரலாற்றிலேயே பலம் வாய்ந்த அணியும், அதிக முறை கோப்பையை வென்ற அணியுமான மும்பை அணிக்கு இந்த சீசன் பெரும் அடியாக விழுந்துள்ளது. எல்லா சீசனிலும் ஆதிக்கம் செலுத்தும் மும்பை அணி இந்த சீசனில் தொடக்கம் முதலே தடுமாறி வருகிறது. இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள 9 போட்டிகளில் தோல்வியையே தழுவியுள்ளது. இதனால் ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பையும் அந்த அணி இழந்துள்ளது. இன்னும் இரண்டு போட்டிகள் மீதமுள்ள நிலையில் இரண்டிலும் வெற்றி பெற்று ஆறுதலை தேடிக் கொள்ளும் நிலையிலேயே மும்பை அணி உள்ளது. இந்நிலையில் இன்று இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கும் இந்த சீசன் பின்னடைவாகவே உள்ளது. இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 5ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ள ஐதராபாத் அணி 7 போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 2 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் கூட ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியாது. ஆகையால் மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெற்று ஆறுதல் தேடிக்கொள்ளும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எலியும் பூனையுமாக சண்டை போட்டுக் கொண்டிருக்கும் கணவன் மனைவி கூட, அந்த பரமேஸ்வரன் பார்வதி போல ஒற்றுமையாக வாழலாம். செவ்வாய்க்கிழமை இந்த 1 விளக்கை ஏற்றினால்.
கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு வரக்கூடாது என்றால் அது நடக்காத காரியம். சண்டை சச்சரவுகள் வரவேண்டும். ஆனால் அந்த சண்டை ஒரு நாளைக்கு மேல் நீடிக்கக்கூடாது. உடனடியாக அவர்கள் சமாதானம் ஆகி விட வேண்டும். நீ பெரியவரா? நான் பெரியவரா? என்று முட்டிக்கொண்டு சின்ன சின்ன சண்டையில் ஆரம்பித்த விவகாரம், பெரிய விவாகரத்து வரை கொண்டு போய் விட்டுவிடும். விவாகரத்து என்ற எதிர்மறையான இப்படி ஒரு வார்த்தையை சொல்ல கூடாது தான். இருப்பினும் அவ்வளவு தூரம் பிரச்சனைகள் செல்லக்கூடாது என்றால் ஒருவருக்கு ஒருவர் முன்கூட்டியே விட்டுக் கொடுத்து நடக்க வேண்டும்.
எல்லாம் நடந்து முடிந்த பின்பு உட்கார்ந்து அழுது கொண்டிருப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை. கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போல மாறிவிடும். சரி எல்லாம் இருக்கட்டும். ஒரே வீட்டில் இருந்தும் கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் இல்லை. எப்போதும் பார்த்தாலும் சண்டை சச்சரவாக உள்ளது என்றால் அவர்கள் மிக மிக சுலபமாக சக்திவாய்ந்த எந்த வழிபாட்டை செய்வது?
நீங்கள் கணவராக இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். மனைவியாக இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். உங்கள் வாழ்க்கை துணையோடு சந்தோஷமாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கைமேல் பலன் தரும் பரிகாரம். செவ்வாய்க்கிழமை வீட்டின் அருகில் இருக்கக் கூடிய துர்கை அம்மன் கோவிலுக்கு ராகு கால நேரத்தில் சென்று 2 சிறிய மண் அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி மஞ்சள் நிறத்தில் திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
நீங்கள் பெண்களாக இருந்து உங்களுடைய கணவரோடு சேர்ந்து வாழ வேண்டுமென்றால் மேல் சொன்ன படி விளக்கு ஏற்றி விட்டு, அந்த அம்பாள் கோவிலில் கொடுக்கக்கூடிய குங்கும பிரசாதத்தை வாங்கி, அந்த அம்பாள் முன்பாகவே நின்று மனதார பிரார்த்தனை செய்துகொண்டு, அதாவது ‘என்னுடைய கணவரோடு நான் வாழ்நாள் முழுவதும் சண்டை சச்சரவு இல்லாமல் சந்தோஷமாக வாழ வேண்டும்’ என்று பிரார்த்தனை செய்து அந்த குங்குமத்தை முதலில் வகுட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு நெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அந்த கும்பத்தை உங்களுடைய மாங்கல்யத்தில் இட்டுக் கொள்ளுங்கள்.
அம்பாளைப் பார்த்தவாறு நின்று குங்குமத்தை இப்படி வைத்துக் கொள்ள வேண்டும். 11 வாரம் செவ்வாய்க்கிழமை தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். பெண்களுக்கு இடையே ஒரு வாரம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும். அதாவது மாதவிலக்கு நாள் வரும்போது, அந்த வாரத்தை தவிர்த்துவிடுங்கள். அடுத்த வாரத்திலிருந்து கணக்கு வைத்துக் கொள்ளலாம். தவறு கிடையாது.
இந்த பரிகாரத்தை ஒரு ஆண் செய்ய வேண்டுமென்றால் இதே போல் தான் மேலே சொன்னபடி விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, அம்பாளிடம் மனைவியோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று மனதார பிரார்த்தித்து, அம்பாள் சந்நிதியில் கொடுக்கும் குங்குமத்தை வாங்கி ஆண்கள் நெற்றியில் இட்டுக் கொண்டால் போதும்.
ஆனால் இந்த குங்குமத்தை உங்கள் கையாலேயே கொண்டுபோய் உங்களுடைய மனைவியின் நெற்றியில், வகுட்டில், மாங்கல்யத்தில், நீங்களே வைத்து விடுவது மிகவும் சிறப்பு. முடியாதவர்கள் அவர்களிடம் கொடுத்து இட்டுக்கொள்ள சொல்லுங்கள். இதை ஆண்களும் 11 வாரம் தொடர்ந்து செய்ய வேண்டும். பிறகு பாருங்கள். உங்களுடைய இல்லற வாழ்க்கை எப்படி இனிமையாக மாறுகிறது என்று.