ஸ்கொட்லாந்து அணிக்கெரான போட்டியில் இலங்கை மகளிர்

by Column Editor

மகளிர் T20 உலகக் கிண்ண தகுதிகாண் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஸ்கொட்லாந்து அணிக்கெரான போட்டியில் இலங்கை மகளிர் அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்;தாடிய ஸ்கொட்லாந்து மகளிர் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 94 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

அதையடுத்து, 95 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை மகளிர் அணி ஆட்டமிழப்புகள் இன்றி இலக்கினை அடைந்து போட்டியில் வெற்றி பெற்றது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் Chamari Athapaththu அதிகபடியாக 59 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment