இலங்கை அணியை 6 விக்கெட்டுக்களால் வீழ்த்திய தென்னாபிரிக்கா!

by Lankan Editor

டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று இடம்பெற்ற முதற்சுற்று போட்டியில் இலங்கை அணியை 6 விக்கெட்டுக்களால் தென்னாபிரிக்கா அணி வீழ்த்தியுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 77 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

அதன்படி, 78 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 16.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது

Related Posts

Leave a Comment