125
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், முழுமையாக சேதமடைந்த வீடுகளை அரச செலவில் முப்படையினரின் உதவியுடன் மீளக் கட்டுவதற்குமான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பான பிரேரணையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று அமைச்சரவையில் சமர்ப்பித்த நிலையில் அதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, உலக சுற்றாடல் தின கொண்டாட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டை சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பயன்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது