இலங்கையில் முட்டை உற்பத்தி அதிகரிப்பு!

by Editor News

இலங்கையில் மாதாந்த முட்டை உற்பத்தி ஐந்து முதல் ஆறு இலட்சம் வரை அதிகரித்துள்ளதாக முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் எச்.எம்.பி.ஆர்.அழககோன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டின் மாதாந்த முட்டை நுகர்வு சுமார் ஒரு மில்லியனால் அதிகரித்துள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது சந்தையில் பல விலைகளில் முட்டை விற்பனைக்கு வருவதால், மக்கள் எளிதில் வாங்கிச் செல்கின்றனர் என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related Posts

Leave a Comment