நாடாளுமன்றில் மாற்றங்களுடன் மீண்டும் முன்வைக்கப்பட்டது புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்!

by Lifestyle Editor

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் இன்று நாடாளுமன்றில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது.

தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கிலும் தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பான கவலைகளை நிவர்த்தி செய்யும் வகையிலும் இந்த சட்டமூலம் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.

சர்வதேச சட்டங்களை ஆய்வு செய்தபின் மிக நுணுக்கமாக உருவாக்கப்பட்ட இந்த சட்டம், தற்போதைய சட்ட கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் அதேவேளை மக்களின் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்க முயல்கிறது.

முன்மொழியப்பட்ட சட்டமூலம், தடுப்புக்காவல் உத்தரவுகளை ஜனாதிபதியிடமிருந்து சட்ட அமுலாக்க நிறுவனங்களுக்கு மாற்றுவதன் மூலம் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது.

பயங்கரவாத தடை சட்டமானது மீண்டும் மீண்டும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமைக்காக விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், இந்த புதிய சட்டமூலம் கொண்டுவரப்படுகின்றது.

முன்னதாக கடந்த ஆண்டு ஓக்டோபர் மாதம் நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதும் சிறுபான்மைக் கட்சிகளும், சர்வதேச மனித உரிமை மற்றும் சிவில் அமைப்புகள் கடும் எதிர்ப்பை அடுத்து தாமதப்படுத்தப்பட்டது.

Related Posts

Leave a Comment