போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ்!

by Lifestyle Editor

போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் ஜன.19ம் தேதி வரை தற்காலிக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

நேற்று முதல் நீடித்த அரசு போக்குவரத்துக் தொழிலாளர்களின் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தொழிற்சங்கத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.பொங்கல் பண்டிகை நெருங்குவதால் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக கூறியுள்ளனர். பண்டிகை காலத்தில் நடத்தப்படும் போராட்டம் முறையற்றது என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்த நிலையில், தொழிற்சங்கங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளன. அதன்படி போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் ஜன.19ம் தேதி வரை தற்காலிக வாபஸ் பெறப்பட்டுள்ளது. வேலை நிறுத்தத்தை நிறுத்தி வைத்து பணிக்கு திரும்ப ஒப்புதல் அளித்துள்ள தொழிலாளர்கள், பணிக்கு திரும்பும் தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையைத் தொடங்கவேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு 96 மாதமாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படியை வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும், 20,000 காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர், நடத்துனர் நியமனம் செய்வதை கைவிட வேண்டும்.போக்குவரத்துத்துறை இழப்பை ஈடுகட்ட பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடதக்கது.

Related Posts

Leave a Comment