கோயில்களில் அரளி பூக்களுக்கு தடை – அரசுஅதிரடி உத்தரவு!

by Editor News

கோயில் பூஜைகளில் அரளி பூக்களை பயன்படுத்தக்கூடாது என்று கேரள அரசு தடைவிதித்துள்ளது.

கேரள மாநிலத்தில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட கோவில்கள் அமைந்துள்ளன. கோவில் பூஜைகளின் போது சாமி சிலைகளுக்கு பூக்கள் வைத்து வழிபடுவது வழக்கம். இந்த சூழலில் கேரளாவில் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி சூர்யா சுரேந்திரன் என்கின்ற 24 வயது செவிலியர் லண்டனுக்கு வேலை நிமித்தமாக செல்ல தயாராகியுள்ளார். அப்போது செல்போன் அழைப்பு ஒன்று வரவே சூர்யா போனில் பேசிக்கொண்டபடி வீட்டிலிருந்த அரளிச்செடியிலிருந்து ஒரு பூவை எடுத்து விளையாட்டுத்தனமாக வாயில் போட்டுள்ளார். இதில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சூர்யாவின் உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து கொச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சூர்யா உயிரிழப்பதற்கு முன்பு மருத்துவர்களிடம் தான் அரளி பூ மற்றும் அதன் இலைகளை வாயில் போட்டு மென்றதாக கூறியுள்ளார். அவரது உடலை பிரேத பரிசோதனை செய்தபோது அரளி பூ விஷத்தால் அவர் உயிர் இழந்தது தெரியவந்தது. ஆயுர்வேத மருத்துவத்தில் அரளி பூ பயன்படுத்தப்பட்டாலும் அது மிகவும் விஷ தன்மை வாய்ந்தது. எனவே கேரளா அரசு கோயில்களில் அரளி பூக்களை பயன்படுத்த தடை விதித்துள்ளது.

Related Posts

Leave a Comment