3 பேருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு!

by Lifestyle Editor

பாரத ரத்னா விருது இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாகும். மிகச்சிறந்த தேசிய சேவை ஆற்றியவர்களைப் பாராட்டிப் பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. இச்சேவை கலை, அறிவியல், இலக்கியம் கலாச்சாரம், விளையாட்டு மற்றும் பொதுச்சேவை ஆகிய துறைகளை உள்ளடக்கி இருக்கிறது.

எனினும் பிற துறைகளில் உள்ளவர்களும், இவ்விருதைப் பெரும் வகையில் நவம்பர், 2011-இல் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இவ்விருது பெற்றவர்களுக்குச் சிறப்புப் பட்டப்பெயர்கள் எதுவும் வழங்கப்படுவது இல்லையெனினும் இந்தியாவின் முன்னுரிமை வரிசை பட்டியலில் அவர்களுக்கு இடம் உண்டு. பாரத ரத்னா என்பது இந்தியாவின் ரத்தினம் எனப் பொருள் தரும்.

இந்நிலையில் முன்னாள் பிரதமர்கள் பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் சரண் சிங்கிற்கு பாரத ரத்னா அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment