206
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. வழக்கம்போல் மாணவர்களை விட மாணவியர் அதிக அளவில் தேர்ச்சி (4.07% அதிகம்) அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டார். http://tnresults.nic.in, http://dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக தேர்வு முடிவுகளை அறியலாம்.மாணவர்கள் பதிவு செய்துள்ள மொபைல் எண்களுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படுகிறது.
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். கடந்த ஆண்டு 94.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் 7,60,606 மாணவ, மாணவிகள் எழுதிய பிளஸ் 2 பொதுத்தேர்வில் 7,19,196 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.