உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கு ‘ஆதார்’ கட்டாயம்- தமிழக அரசு உத்தரவு

by Column Editor

பொதுமக்கள், நோயாளிகளுக்கு ஆதாரின் அவசியம் பற்றி தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை:

உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கும், வழங்குவதற்கும் ஆதார் கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக இணைய தளங்களில் பதிவு செய்வோர், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான நோயாளிகளை ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றுதல், உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வருவோர் ஆதார் எண் அடிப்படையில் அத்தகைய சேவைகளை பெறலாம்.

தொடர்பில்லா சேவைகளை பெறவும், ஆதாரை கட்டாயமாக்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தனிநபருக்கு ஆதார் எண் ஒதுக்கப்படும் வரை, அவருக்கு தொடர்பில்லா சேவைகள் வழங்கப்பட வேண்டும். பொதுமக்கள், நோயாளிகளுக்கு ஆதாரின் அவசியம் பற்றி தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு அதில் தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment