பிரபல நடிகரின் படத்தில் குத்தாட்டம் போட தயாரான நடிகை சமந்தா- ஒரே ஒரு பாடலுக்கு இவ்வளவு சம்பளமா?

by Column Editor

தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகரான அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா என்ற திரைப்படம் தயாராகி வருகிறது. பெரிய அளவில் எடுக்கப்படும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பில் தான் உள்ளது.

படம் குறித்து சின்ன தகவல் வந்தாலும் ரசிகர்கள் பெரிய அளவில் வரவேற்கிறார்கள்.

இப்போது படம் குறித்து ஒரு ஸ்பெஷல் தகவல் வந்துள்ளது. அதுஎன்னவென்றால் ஆன்மீக பயணம், சுற்றுலா எல்லாம் முடித்திருக்கும் நடிகை சமந்தா புஷ்பா படத்தில் ஒரே ஒரு ஸ்பெஷல் பாடலுக்கு குத்தாட்டம் போட தயாராகியுள்ளாராம்.

சமந்தா ஒரு பாடலுக்கு நடனம் ஆட ஒப்புக்கொண்ட விஷயம் சமீபத்தில் வெளியாகியுள்ளது, அந்த பாடலின் படப்பிடிப்பும் அடுத்த வாரத்தில் பெரிய செட் போட்டு நடக்க இருக்கிறதாம்.

ஸ்பெஷல் பாடலுக்கு நடனம் ஆட நடிகை சமந்தா கோடி கணக்கில் சம்பளம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது, எவ்வளவு என்று சரியாக தெரியவில்லை.

இப்படத்தை தாண்டி சமந்தா நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ஃபஸ்ட் லுக் இன்று வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

Related Posts

Leave a Comment