பிரபல இயக்குனர் திடீர் மரணம்.! சோகத்தில் மூழ்கிய திரையுலகினர்.!

by Column Editor

செங்கோட்டை திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சி.வி.சசிகுமார் புற்றுநோயிக்காக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற ‘செங்கோட்டை’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சி.வி.சசிகுமார். இந்த படத்தை மிகப்பெரிய தயாரிப்பாளர் ஆர்.பி.சவுதிரி தயாரித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து மற்ற எந்த படங்களையும் இவர் இயக்க வில்லை.

ஆனாலும் பல படங்களில் எழுத்தாளராக பணியாற்றியுள்ளார். மேலும், தமிழில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘மகாபாரம்’ தொடரையும் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், மகாபாரம் தொடரில் கர்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் மனோகர், எங்கள் மகாபாரதம் இயக்குனர் இயற்கை எய்தினார் என உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment