பீஸ்ட் திரைப்படத்தில் கொலவெறி பாடல்! உற்சாகத்தில் ரசிகர்கள்..

by Lifestyle Editor

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகிவரும் திரைப்படம் தான் பீஸ்ட்.

பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

மேலும் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான டாக்டர் மாபெரும் வெற்றியடைந்து 100 கோடிக்கும் மேல் வசூலை குவித்தது.

சென்னை, டில்லி என முக்கிய இடங்களில் நடந்த பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ள நிலையில் அடுத்ததாக ஜார்ஜியாவில் படப்பிடிப்பு நடக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

இதனிடையே தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் கொலவெறி என்ற வார்த்தையுடன் ஒரு பாடல் அமைந்துள்ளதாகவும், அப்பாடல் ஏற்கனவே படக்குழுவினரிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment