சர்வதேச கிரிக்கெட்டில் கடைசியாகக் களமிறங்கிய பிராவோ, கெயில்?

by Editor News

சர்வதேச கிரிக்கெட்டில் தனது கடைசி ஆட்டத்தில் டுவைன் பிராவோ நேற்று (சனிக்கிழமை) களமிறங்கினார். டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் நேற்று மோதின.

இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேற்கிந்தியத் தீவுகள் ஆல்-ரௌண்டர் டுவைன் பிராவோவுக்கு இதுவே கடைசி சர்வதேச ஆட்டம். இந்த ஆட்டத்தில் அவர் பேட்டிங்கில் ஒரு சிக்ஸர் உள்பட 10 ரன்கள் எடுத்தார்.ஆட்டம் முடிந்தவுடன் ரசிகர்களின் கைத்தட்டல்களுக்கு மத்தியில் பிராவோ விடைபெற்றார். சகவீரர்கள் மற்றும் எதிரணியினர் அவருக்கு மரியாதை செலுத்தினர்.

பிராவோவைப் போல கிறிஸ் கெயில் அதிகாரப்பூர்வமாக ஓய்வை அறிவிக்கவில்லை. எனினும், பேட்டிங்கில் ஆட்டமிழந்தவுடன் ரசிகர்களை நோக்கி பேட்டை எழுப்பி களத்திலிருந்து விடைபெற்றார்.

ஆட்டம் முடிந்தவுடன் பிராவோவுடன் இணைந்து அவரும் கேமிராவில் கையெழுத்து போட்டார். எனவே, கிறிஸ் கெயிலுக்கும் இதுவே கடைசி ஆட்டமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment