தமிழ் சினிமாவில் அனைத்துவித கேரக்டர்களையும் இயக்குநர், கதையாசிரியர் என பல பிரிவுகளில் கொடிக்கட்டி பறந்தவர் இயக்குநர் டி ராஜேந்திரன். அப்படி பல ஹிட் படங்களை கொடுத்தும் வந்தார் ராஜேந்திரன். அதேசமயம் சத்யராஜ் வில்லனாக அறிமுகப்படுத்தியது டி ஆர் தான்.
அவர்கள் படப்பிடிப்பில் நடந்து கொண்டதை ஸ்டண்ட் மாஸ்டர் ஜுடோ ரத்தினம் கூறியுள்ளார். ஒரு படத்தில் சத்யராஜை டி ஆர் அடிப்பது போன்ற காட்சி எடுக்கப்பட்டது. அப்போது டி ஆர் உண்மையாகவே ஓங்கி வயற்றில் அடித்துள்ளார்.
இதனால் வலியில் கதறிய சத்யராஜ், ஏண்டா நாயே நீ எல்லாம் ஒரு மனுஷனா என்று கூறி திட்டித்தீர்த்து படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியேறினார். இரு நாட்கள் வராமல் இருந்தவரை பின் அவரை சமாதானப்படுத்தி அந்த காட்சியை நடிக்கவைத்துள்ளார் டி ராஜேந்திரன்.