ஆடியோ வெளியீட்டு விழா இல்லை, ஆனா இன்னொரு சர்ப்ரைஸ் இருக்கு… ‘பீஸ்ட்’ படக்குழுவினர் புதிய பிளான்!…

by Column Editor

பீஸ்ட் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்குப் பதிலாக படக்குழுவினரின் பிரத்யேக பேட்டி ரசிகர்களுக்காக வெளியிடப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். கத்தி, மாஸ்டர் படங்களை அடுத்து அனிருத் மூன்றாவது முறையாக விஜய் படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. மேலும் செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லீ, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

படத்திலிருந்து வெளியான அரபிக் குத்து பாடல் 175 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. அடுத்ததாக பீஸ்ட் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

வழக்கமாக விஜய் படங்களின் ஆடியோ வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமான வகையில் நடைபெறும். தற்போது பீஸ்ட் படத்தின் ஆடியோ வெளியீட்டிற்கு விழாவிற்கும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறாது என்று தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா சூழல் காரணமாக ஆடியோ வெளியீட்டு விழா நடத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய் மற்றும் பீஸ்ட் படக்குழுவினர் உடன் பிரத்யேக பேட்டியை ஏப்ரல் 14-ம் தேதி மாலையில் வெளியிட சன் டிவி நிறுவனம் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஆடியோ வெளியீட்டு விழா இல்லாததால் ஏமாற்றமடையும் ரசிகர்களுக்கு இந்த பிரத்யேக பேட்டி ஆறுதலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment