பூஜையுடன் பிரம்மாண்டத் துவக்கம் – சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் ‘வேதாளம்’ தெலுங்கு ரீமேக்

by Column Editor

சிரஞ்சீவி நடிப்பில் உருவாக இருக்கும் போலா ஷங்கர் படத்தின் பூஜை இன்று படைப்பெற்றது.

தமிழில் சிறுத்தை சிவா, அஜித் கூட்டணியில் வெளியான ‘வேதாளம்’ திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. தற்போது வேதாளம் தெலுங்கில் போலா ஷங்கர் என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. தெலுங்கு ரீமேக்கில் மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிக்கிறார். இப்படத்தை மெஹர் ரமேஷ் என்பவர் இயக்குகிறார். இப்படத்தில் சிரஞ்சீவியின் தங்கையாக நடிக்க கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சிரஞ்சீவிக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார்.

இந்த படத்தின் டைட்டிலை சிரஞ்சீவியின் பிறந்தநாளையொட்டி படக்குழு அறிவித்தது. இன்று அந்தப் படத்தின் பூஜை நடைபெற்றது. பூஜையில் பல திரைத்துறை பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். கொரட்டாலா சிவா, வம்சி படிப்பள்ளி, ஹரிஷ் சங்கர், மலினேனி கோபிசந்த், பாபி, என் ஷங்கர் மற்றும் சத்யானந்த் ஆகியோர் படத்தின் திரைக்கதையை தயாரிப்பாளர்களிடம் ஒப்படைத்தனர். வி.வி.விநாயக் கேமராவை சுவிட்ச் ஆன் செய்ய, கே ராகவேந்திர ராவ் பூஜை ஷாட்டுக்கு கிளாப் அடித்துள்ளார்.

நவம்பர் 15-ம் தேதி முதல் படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment