வாய்ப்பு கிடைத்தும் தவறவிட்ட டாப் ஸ்டார் பிரஷாந்த், தளபதி விஜய்.. சரியாக பயன்படுத்திய அஜித்

by Editor News

பிரஷாந்த்

90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக இருந்தவர் டாப் ஸ்டார் பிரஷாந்த். விஜய், அஜித் இருவரையும் விட முன்னணியில் இருந்தார்.

ஆனால், திடீரென மார்க்கெட்டை இழந்து சில வருடங்கள் தமிழ் சினிமாவில் படங்கள் நடிக்காமல் இருக்கிறார்.

மீண்டும் கம் பேக் கொடுக்க வேண்டும் என்பதற்காக தற்போது அந்தகன் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் எப்போது வெளியாகும் என தெரியவில்லை.

பிரஷாந்த் தனது திரை வாழ்க்கையில் பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார். சில சூப்பர்ஹிட் படங்களையும் தவறவிட்டுள்ளார்.

தவறவிட்ட வாய்ப்பு

அப்படி அவர் தவறவிட்ட திரைப்படம் தான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். இப்படத்தில் அஜித் நடித்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தவர் பிரஷாந்த் தானாம்.

ஆனால், அவரால் இந்த ரோலில் நடிக்க முடியாமல் போய்விட்டது. பின் இந்த வாய்ப்பு தளபதி விஜய்யை தேடி சென்றுள்ளது. ஆனால், விஜய்யாலும் இப்படத்தில் நடிக்க முடியாமல்.

இதன்பின் தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு அஜித்துக்கு சென்றுள்ளது. தனக்கு கிடைத்த வாய்ப்பு சரியாக பயன்படுத்தி கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார்.

இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படும் படங்களில் இதுவும் ஒன்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment