அஜித்61 படத்தில் இணையும் பிக் பாஸ் நடிகர்! யார் தெரியுமா?

by Lifestyle Editor

நடிகர் அஜித் – ஹெச் வினோத் கூட்டணியில் சமீபத்தில் ரிலீஸ் ஆன வலிமை படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வசூலும் மூன்றே நாளில் 100 கோடி வந்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது.

அடுத்து அஜித் மீண்டும் இதே கூட்டணியில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். ஹெச் வினோத் இயக்க, போனி கபூர் தயாரிப்பில் AK61 படத்தின் ஷூட்டிங் விரைவில் ஹைதராபாத்தில் தொடங்க இருக்கிறது. அதற்காக செட் அமைக்கும் பணிகள் நடந்துவருவதாக தெரிகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் பிக் பாஸ் புகழ் நடிகர் கவின் முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறார் என தகவல் பரவி வருகிறது. அவரது ரோல் என்னவாக இருக்கும் என்று தான் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

பிக் பாஸுக்கு பிறகு கவின் லிப்ட் என்ற படத்தில் நடித்தார். அந்த படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அஜித் உடன் அடுத்து நடிப்பதால் கவினின் மார்க்கெட் கிராப் உயருமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related Posts

Leave a Comment