‘வலிமை’ வெற்றியை கொண்டாடிய ஹுமா குரோஷி.. படக்குழுவினருடன் கேக் வெட்டி மகிழ்ச்சி !

by Column Editor

‘வலிமை’ படத்தின் வெற்றியை படத்தின் கதாநாயகி ஹுமா குரோஷி கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

ஹாலிவுட் தரப்பில் பைக் ரேஸிங் கதைக்களத்தில் உருவாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் ‘வலிமை’. நடிகர் அஜித் மாஸ் நடிப்பை வெளிப்படுத்தியுள்ள இப்படத்திற்கு உலகம் முழுவதிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் வெளியான இப்படம் திரையரங்குகளில் ஹவுஸ்புல்லாகி ஓடிக்கொண்டிருக்கிறது.

எச்.வினோத் இயக்கியுள்ள இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. போனி கபூர் தயாரித்த இப்படம் தமிழ், தெலுங்கு. இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும், கதாநாயகியாக ஹுமா குரோஷியும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். தற்போது இந்த படம் 100 கோடி மேல் வசூல் சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகியான ஹுமா குரோஷி, தற்போது மஹாரானி வெப் தொடரின் இரண்டாவது சீசனில் நடித்து வருகிறார். இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ‘வலிமை’ படத்தின் வெற்றியை ஹுமா கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படங்களை அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment