விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட சீன ரசிகர்கள்

by Column Editor

இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய்யை வைத்து இயக்கிய படம் மாஸ்டர். சமூகத்தில் நடக்கும் முக்கிய விஷயத்தை பற்றி படம் பேசியிருந்தது.
விஜய் சேதுபதியும் படத்தில் நடிக்க ரசிகர்கள் படத்தை பெரிய அளவில் வரவேற்றார்கள், படமும் வசூலில் மாஸ் செய்திருந்தது. இந்த படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடல் செமய ஹிட் என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான்.
தமிழ் ரசிகர்களை தாண்டி பல மொழி முன்னணி நடிகர்கள் இந்த பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ எல்லாம் வெளியிட்டார்கள், எல்லாமே செம வைரலானது.தற்போது இந்தியாவை தாண்டி சீனா வரை விஜய்யின் மாஸ்டர் பட வாத்தி கம்மிங் பாடல் பிரபலமாகியுள்ளது.
சீன ரசிகர்கள் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடி வெளியிட்ட வீடியோ இப்போது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

Related Posts

Leave a Comment