இல்லங்களை வசிக்கரிக்கும் வரும் ‘முத்தழகு’

by Column Editor

விஜய் டிவியின் ‘முத்தழகு’ சீரியல் எப்போது ஒளிப்பரப்பாகும் என்ற புதிய ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்கள் தொடர்ந்து ஹிட்டடித்து வருகிறது. அதனால் புத்தம் புதிய சீரியல்களை வித்தியாசமான கதைக்களத்துடன் களமிறக்கி வருகிறது விஜய் டிவி. அந்த வகையில் கிராமத்து கதைக்களத்துடன், புத்தம் புதிய சீரியல் ஒன்றை ஒளிப்பரப்ப உள்ளது. முத்தழகு என்று பெயரிடப்பட்ட இந்த விரைவில் ஒளிப்பரப்பாகும் என விஜய் டிவி அறிவித்திருந்தது.

செம்மண் வாடையுடன் அழகிய கிராமம் ஒன்றில் இருக்கும் நாயகி, தன் மண்ணை காப்பாற்ற கடினமாக போராடுகிறார். தன் காளை மாடுகளை கடன் கொடுத்தவர்கள் ஓட்டி சென்றாலும், காளைகள் இல்லாமல் கதாநாயகியே, காளை மாடுகளுக்கு பதில் ஏர் பூட்டி கொண்டு நிலத்தை உழுகிறார். இதை பார்க்கும் கதாநாயகனின் தாய், மண்ணை நேசிக்கும்முத்தழகின் விதியை மாற்ற, கண்ணை திறக்குமா சாமி என்ற ப்ரோமோ வெளியானது.

இந்நிலையில் புதிய ப்ரோமோ ஒன்றை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இதில் இந்த சீரியல் எப்போது ஒளிப்பரப்பபாக உள்ளது என்பதை விஜய் டிவி ப்ரோமோவாக வெளியிட்டுள்ளது. அதன்படி நவம்பர் 15-ஆம் தேதி திங்கள் முதல் சனிக்கிழமை வரை முத்தழகு சீரியல் மதியம் 3.30 மணிக்கு ஒளிப்பரப்பப்படுகிறது. இந்த சீரியலை காண ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

Related Posts

Leave a Comment