பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையுடன் டாக்டர் பாரதி.. வரப்போகும் முக்கிய ட்விஸ்ட் இதுதான்

by Column Editor

முல்லையாக நடிக்கும் காவ்யாவுடன் பாரதி எடுத்துக் கொண்ட செல்பி இணையத்தில் வைரல்.

விஜய் டிவியில் ரசிகர்களின் ஃபேவரெட் சீரியல்கள் லிஸ்டில் இடம்பெற்றிருக்கும் சீரியல்கள் என்றால் அது பாரதி கண்ணம்மாவும், பாண்டியன் ஸ்டோர்ஸ் . இந்த 2 சீரியல்களும் 3 ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றி பாதையில் பயணித்து கொண்டிருக்கிறது. ஃபேமலி ஆடியன்ஸ் மட்டுமில்லை பலரும் இந்தசீரியல்களை விரும்பி பார்க்கின்றனர்.சீரியல் மீது கொண்ட ஈர்ப்பின் காரணமாக அதில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் மீதும் அவர்களின் கவனம் சென்று விடுகிறது. அந்த வகையில் இந்த 2 சீரியல்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ் கூட்டம் உள்ளது.

அதிலும் குறிப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம், மீனா, முல்லை ரோலில் நடிக்கும் காவ்யா, சாய் காயத்ரி, கதிராக நடிக்கும் குமரன் அதே போல் பாரதி அருண் பிரசாத், அஞ்சலியாக நடித்த ஸ்வீட்டி ஆகியோரை இன்ஸ்டாவில் பல லட்சம் ரசிகர்கள் ஃபாலோ செய்கின்றனர். நடிப்பை தாண்டி அவர்களின் பர்சனல் லைஃப் பற்றியும் அதிக தெரிந்து கொள்ள விரும்புகின்றனர் ரசிகர்கள். இதற்கு காரணம், சீரியலில் அந்த கேரக்டர்கள் ஏற்படும் தாக்கம் தான். இந்த 2 சீரியல் ஆர்டிஸ்டுகளும் இதுவரை பலமுறை மகா சங்கமமாக சந்தித்துள்ளனர். இந்நிலையில் தற்போது மீண்டும் அதே போல் மற்றொரு நிகழ்வு நடக்கவுள்ளதா அல்லது முக்கியமான ட்விஸ்டுக்காக எடுக்கப்பட்ட காட்சியா என்று தெரியவில்லை ஆனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பாரதி கண்ணம்மா அருண் பிரசாத் தோன்ற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதை நிரூப்பிக்கும் வகையில் சில புகைப்படங்களும் இணையத்தில் கசிந்துள்ளன.

அதாவது, முல்லையாக நடிக்கும் காவ்யாவுடன் பாரதி எடுத்துக் கொண்ட செல்பி, மூர்த்தி – தனத்தின் குழந்தை பாண்டியனை பாரதி தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் ஆகியவை இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதில் முல்லையாக நடிக்கும் காவ்யா ஏற்கெனவே அறிவு ரோலில் பாரதியின் தங்கையாக கண்ணம்மா சீரியலில் நடித்து இருந்தார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பிஸியானதால் அவர் அறிவு ரோலில் இருந்து பாதியில் விலகினார். பாண்டியன் ஸ்டோர்ஸில் சீரியலில் எதற்குபாரதிவருகிறார்? என்ன ட்விஸ்ட் அது? என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவர்த்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Related Posts

Leave a Comment