தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ச்சியாக நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஒளிபரப்பாகி தொடங்கிய நாள் முதல் இன்று வரை தொடர்ந்து ஜீ தமிழின் நம்பர் 1 ரேட்டிங் சீரியலாக இடம் பிடித்து வருகிறது கார்த்திகை தீபம்.
இந்த சீரியலில் கார்த்திக் ராஜ் நாயகனான நடிக்க அர்த்திகா நாயகியாக நடித்து வருகிறார். விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் தொடர்ச்சியாக முதலிடத்தில் இருந்து வரும் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அதாவது ஜூன் 7-ம் தேதி 500-வது எபிசோடில் நுழைந்து புதிய மைல்கல்லை தொட்டுள்ளது. இதனை சீரியல் குழுவினரும் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
அதேபோல் கார்த்திக் ரசிகர்களும் புதுப்புது போஸ்டர்களை உருவாக்கி சமூக வலைதளங்களில் வைரலாக்கி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கார்த்திகை தீபம் சீரியலின் இந்த வெற்றிக்கு மக்கள் கொடுத்த ஆதரவும் வரவேற்பும் தான் காரணம் என்று சீரியல் குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
கார்த்திகை தீபம் சீரியல் தற்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் நகர்ந்து வருகிறது. கார்த்திக் தீபாவின் கணவர் என தெரிந்தும் அவரை தீபாவின் தோழியான ரம்யா அடைய விரும்புவதால், இவர்களிடையே மோதலும் வெடிக்கிறது. இந்த மோதலில் யாருக்கு வெற்றி கிடைத்தது என்கிற சஸ்பென்ஸோடு பயணிக்கிறது இந்த சீரியல், இதனால் இதற்கு ரசிகர்களும் அமோக வரவேற்பு அளித்து வருகின்றனர்.