164
தற்போது பிக் பாஸ் 8ம் சீசனுக்கான பணிகளை டீம் தொடங்கி இருப்பதாக தகவல் வந்திருக்கிறது. மேலும் போட்டியாளர்களை தேர்வு செய்யும் வேலையும் தொடங்கி இருக்கிறதாம்.
பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி சிறைக்கு சென்று வந்த டிடிஎப் வாசன் உடன் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. அவரது காதலி ஷாலின் ஸோயா தற்போது குக் வித் கோமாளியில் போட்டியாளராக வந்திருக்கிறார். அவருக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.
அதனால் டிடிஎப் வாசன் மற்றும் அவர் காதலி ஷாலின் ஸோயா ஆகிய இருவரையுமே பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களாக கொண்டு வர பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.