வெற்றிக் கோப்பையுடன் இயக்குநரை சந்தித்த டைட்டில் வின்னர் அர்ச்சனா..

by Lifestyle Editor

பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் ஓடக் கூடிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.

இந்த நிகழ்ச்சி தமிழ் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம்,தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றிநடைபோட்டு வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரையில் ஏழு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்துள்ளன. ஏழு சீசன்களையும் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கினார்.

மேலும், தொலைக்காட்சியை தாண்டி கூடுதலாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் “பிக்பாஸ் அல்டிமேட்” என்ற பெயரில் ஒளிபரப்பானது.

இந்த நிலையில்,ஏழாவது சீசனில் மற்ற சீசன்களை விட அதிரடியான எக்ஷன்கள் அதிகமாகவே இருந்தது. இதனால் சமூக வலைத்தளங்களில் அதிகமாக விமர்சிக்கப்பட்டது.

அதிலும் பல போராட்டங்களுக்கு மத்தியில் சீரியல் நடிகை அர்ச்சனா டைட்டில் வின்னராக 19 கோடி மக்களால் வாக்களிக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து அர்ச்சனா வெளியில் வந்த பின்னர் யாரும் எதிர்பார்க்காத வகையில் அமைதியாக இருந்து வருகிறார். எங்கு இருக்கிறார்? என்ன செய்கிறார்? என்று கூட கண்டுக் கொள்ள முடியாமல் இருக்கின்றது.

இப்படியொரு நிலையில் வெற்றி கோப்பையுடன் பிக்பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா, தன்னை வளர்த்து விட்ட இயக்குநரான பிரவீன் பெண்ணடியை சந்தித்துள்ளார்.

இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், “எப்போது வெளியில் வருவீர்கள் அர்ச்சனா? ” என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.

Related Posts

Leave a Comment