குஸ்கா..

by Lifestyle Editor

தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி – 1 கிலோ

பெரிய வெங்காயம் – 250 கிராம்

தக்காளி – 3

பச்சை மிளகாய் – 5

காஷ்மீர் மிளகாய் தூள் – 10 கிராம்

மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்

இஞ்சி, பூண்டு விழுது – 3 ஸ்பூன்

தயிர் – 200 ML

நெய் – 2 ஸ்பூன்

எண்ணெய் – 250 ML

புதினா

கொத்தமல்லி இலை

பட்டை – 1

கிராம்பு – 8

பெரிய கருப்பு ஏலக்காய் – 2

ஏலக்காய் – 5

பிரியாணி இலை – 2

ஸ்டார் பூ – 1

ஜாவித்ரி பூ – 1

உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை :

முதலில் பாசுமதி அரிசியை நன்றாக அலசி ஒரு மணி நேரத்திற்கு தண்ணீரில் ஊறவைத்து கொள்ளுங்கள்.

அடுத்து பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரியாணி இலை, ஸ்டார் பூ, பெரிய கருப்பு ஏலக்காய், பட்டை, ஜாவித்ரி பூ, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்துக்கொள்ளவும்.

பிறகு நீளவாக்கில் நைசாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக்கொள்ளவும்.

அடுத்து அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு அதன் பச்சை வாசம் போகும்வரை எண்ணெய்யில் வதக்கவும்.

இஞ்சி பூண்டு விழுது அடிபிடிக்காமல் இருக்க சிறிதளவு உப்பை அதில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

பின்னர் அதில் பச்சை மிளகாய், மஞ்சள் தூள், காஷ்மீர் மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து அது அடிபிடிக்காமல் இருக்க சூடு தண்ணீரை சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.

அடித்து நறுக்கி வைத்துள்ள தக்காளியையும் சேர்த்து நன்றாக கிளறி அதில் புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து நன்கு வதக்கவும்.

பிறகு அதில் தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து ஒரு 5 நிமிடங்களுக்கு மூடிபோட்டு வேகவிடவும்.

மசாலாவில் எண்ணெய் மேலே வந்தவுடன் 1 கிலோ அரிசிக்கு தேவையான அளவு சூடு தண்ணீரை எடுத்து அதில் ஊற்றவும்.

குறிப்பு : அரிசி இரண்டு டம்ளர் என்றால் ஒரு டம்ளருக்கு ஒன்றரை டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளளவும்.

மசாலா தண்ணீர் கொதிவரும்வரை பாத்திரத்தை மூடிவைக்கவும்.

தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் ஏற்கனவே உறவைத்துள்ள பாசுமதி அரிசியை சேர்த்து பொறுமையாக கிளறிவிட்டு உப்பு சரியாக உள்ளதா என்று சரிபார்த்து மூடியை மூடிவிட்டு வேகவிடவும்.

அரிசியும், தண்ணீரும் சம அளவிற்கு வெந்து வந்தவுடன் மெதுவாக அதை கிண்டிவிட்டு அதில் நெய் சேர்த்து கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் அதிகமான தீயில் ஒரு தோசை தவாவை வைத்து அது நன்கு சூடானதும் குஸ்கா பாத்திரத்தை அதன்மேல் வைத்து கொள்ளவும்.

பாத்திரத்தை முடிவைத்தாலும் அதன் ஆவி வெளியே செல்லாமல் இருக்க நல்ல மொத்தமான துணியை கொண்டு மூடி அதன் மேல் தட்டை வைத்து மூடவும்.

பிறகு கீழே தொங்கும் துணியை எடுத்து தட்டின் மேல் ஒன்றாக வைத்து அதன் மேல் வெயிட்டிற்காக ஏதாவது ஒன்றை வைக்கவும்.

அடுத்து அடுப்பின் தீயை முதல் 5 நிமிடங்களுக்கு அதிகமாகவும் பிறகு அடுத்த 15 நிமிடங்களுக்கு மிதமான தீயிலும் தம்மில் போடவும்.

20 நிமிடங்களுக்கு பிறகு அடுப்பை அணைத்து ஒரு 10 நிமிடங்களுக்கு மூடியை திறக்காமல் அப்படியே விட்டுவிடுங்கள்.

10 நிமிடங்களுக்கு பிறகு மூடியை திறந்து பார்த்தால் சுவையான ‘குஸ்கா’ நன்றாக வெந்து பரிமாற தயாராக இருக்கும்.

அவ்வளவுதான் ருசி மிகுந்த மட்டன், கோழி இல்லாதா ‘ப்ளைன் பிரியாணி’ தயார்…

Related Posts

Leave a Comment