மாங்காய் பச்சடி…

by Editor News

மாங்காய் பச்சடி செய்ய தேவையான பொருட்கள்

மாங்காய் – 2,
வெங்காயம் – 1,
தனி மிளகாய் தூள்,
உப்பு,
வெல்லம்,
வெந்தயம்
கடுகு,
கருவேப்பிலை

முதலில் மாங்காயை தோல் நீக்கி சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றாமல் வெந்தயம் மற்றும் கடுகு முறையே ஒரு ஸ்பூன் சேர்த்து நன்றாக வறுத்து அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். பின்னர் அதை கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து பொடியாக நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின்னர் அதில் பொடியாக நறுக்கி வைத்த மாங்காய் மற்றும் தனி மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். மாங்காய் நன்றாக வெந்து குலைந்து வரும்போது அதில் பொடி செய்து வைத்த வெல்லத்தை தூவி வெல்லம் நன்றாக உருகி வரும் நேரத்தில் வெந்தயம், கடுகு சேர்த்து அரைத்து வைத்த பொடியை தூவி அடுப்பை அணைத்து விடவும். இந்த மாங்காய் பச்சடியில் அறுசுவையும் இருக்கும் என்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவாக இருக்கும்.

Related Posts

Leave a Comment