வெளியேற போவது யார் யார்? இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இரண்டு எலிமினேஷன்!

by Column Editor

இனிவந்த வாரங்களில் பிக்பாஸ் வீட்டில் (Biggboss tamil 5) இருந்து ஒரு போட்டியாளர் மட்டுமே வெளியேறிய நிலையில், இந்த வாரம் இருவர் வெளியேற உள்ளதாக கூறப்படுவது பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குறைவான வாக்குகளுடன் யார் யார்? வெளியேற உள்ளனர் என்பது குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம், ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்டு வெளியேறி.. மீண்டும் வயல் கார்டு போட்டியாளராக உள்ளே வந்த, அபிஷேக் ராஜா (Abishek Raja) இரண்டாவது முறையாக எலிமினேட் செய்யப்பட்டு வெளியேறினார்.

இந்நிலையில் இந்த வாரம், பிக்பாஸ் வீட்டில் இருந்து இருவர் வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வாரம் குறைவான வாக்குகள் பெற்ற பிரபலங்களின் பெயர்களும் வெளியாகியுள்ளது.

இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் சிபி (Ciby), தாமரை (Thamarai), நிரூப் (Niroop), அபிநய் (Abinay), அக்ஷரா (Akshara), இமான் அண்ணாச்சி (Imaan Annachi), அமீர் (Ameer) ஆகிய பிரபலங்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதில் நிரூப் தன்னிடம் உள்ள காயினை வைத்து, சஞ்சீவை நாமினேட் செய்தார். ஆனால் பிக்பாஸ் கொடுத்த டாஸ்கில் அவர் தோற்றதால், அவர் பெயர் நாமினேஷன் லிஸ்டில் இருந்து நீக்கப்படவில்லை.

கடந்த ஒரு வாரம் முழுவதும் பல்வேறு குழப்பங்கள், மற்றும் பிரச்சனைகளுடன் நடந்து வந்த…. அரசியல் மாநாடு’ டாஸ்க் நேற்றுடன் முடிவடைந்தது.

இதில் மூன்று அரசியல் கட்சிகளாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு கட்சியிலும் நான்கு உறுப்பினர்கள் விளையாடினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த டாஸ்கில் எந்த கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைத்ததோ அந்த அணியே வெற்றிபெற்ற அணியாக அறிவிக்கப்பட்டது.

இமான் அண்ணாச்சியின் நியாயத்தைப் பேசும் மக்கள் கட்சியும், சிபியின் மக்கள் முன்னேற்ற கழகமும் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. பிரியங்காவின் உரக்கச் சொல் கட்சி தனித்து போட்டியிட்டது. வாக்குப்பதிவு முடிந்து வாக்கு எண்ணிக்கையில் இமான் அண்ணாச்சி மற்றும் சிபி இணைந்த கூட்டணிக்கு 7 வாக்குகளும் பிரியங்காவின் உரக்கச் சொல் கட்சிக்கு 5 வாக்குகளும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுநாள் வரை அரசியல் மாநாடு டாஸ்க் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், இன்றைய தினம் எலிமினேஷன் குறித்த டென்சன் வந்துவிட்டது.மேலும் இந்த வாரம், எப்போதும் எலிமினேஷன் இறுதி வரை வந்து… பின்னர் நூல் இழையில் தப்பிக்கும் அபிநய் மற்றும் நிரூப் ஆகியோர் தான் குறைவான வாக்குகளை பெற்றுள்ளதாகவும், இந்த வாரம் ஒரு எலிமினேஷன் இருந்தால் அபிநய் வெளியேறவே அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அதே போல் யாரும் எதிர்பார்க்காத வண்ணமாக இரண்டு எலிமினேஷன் இருந்தால், அபிநய் மற்றும் நிரூப் ஆகிய இருவர் வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த வாரம் என்ன நடக்கும் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Posts

Leave a Comment