மாயாவை அர்ச்சனாவிற்கு எதிராக திருப்பி விட்ட ஜோவிகா

by Lifestyle Editor

இதுவரை பிக்பாஸ் வீட்டிலிருந்து பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், நிக்சன், ரவீனா, விசித்திரா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

மேலும், கடந்த வாரம் பணப் பெட்டி டாஸ்க் நடந்தது. இதில் பூர்ணிமா ரவி 16 லட்ச ரூபாய் பணத்துடன் வெளியேறினார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் மிட் வீக் எவிக்ஷன் கொடுத்து விஜய் வர்மாவை வெளியில் அனுப்பியுள்ளனர்.

100 நாட்களை பிக்பாஸ் சீசன் 7 கடந்து விட்ட காரணத்தினால் வெளியில் சென்ற பிரபலங்கள் மீண்டும் வீட்டிற்குள் வந்த வண்ணம் உள்ளனர்.

அந்த வகையில், இன்றைய தினம் ஜோவிகா உள்ளே வந்துள்ளார். வந்தவர், போட்டியாளர்களின் மனநிலையை மாற்றும் வகையில் அவர்களுக்கு சில அறிவுரைகளை கூறியுள்ளார்.“பிக்பாஸ் வீட்டில் இருந்த போது நம்முடைய கேங்கை கடுமையாக விமர்சித்த அர்ச்சனாவுடன் ஏன் இப்படி சேர்ந்து கொண்டு இருக்கீங்க..?” என மாயாவை அர்ச்சனா பக்கம் திருப்பியுள்ளார்.

இந்த சீசனில் மாயா மாத்திரம் இல்லாவிட்டால் பிக்பாஸ் சீசன் 7 வேஸ்ட் என கொந்தளிக்கும் வகையிலும் பேசியுள்ளார். இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

வெளியில் சென்று உள்ளே வந்தாலும் இன்னும் ஜோவிகாவின் வன்மம் அடங்கவில்லை என ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.

Related Posts

Leave a Comment