‘நீ பேசாதே’… சிபியை பயங்கரமாக‌ எச்சரித்த அக்ஷரா !

by Column Editor

சிபியின் செயலால் கோபமடைந்த அக்ஷரா, பங்கரமான கத்தி எச்சரிக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

கனா காணும் காலங்கள் டாஸ்க் இன்றைக்கும் தொடர்கிறது. அதன்படி சிபி தலைமையாசிரியராகவும், மற்ற போட்டியாளர்கள் ஆசிரியராகவும் மாறி விளையாடி வருகின்றனர். அப்போது தனது பள்ளி உடையை அயர்ன் செய்ய அனுமதி கேட்கும்போது அக்ஷராவுக்கும் சிபிக்கும் மோதல் ஏற்படுகிறது. இதனால் டென்ஷனான அக்ஷரா, மண்டை மேல உட்கார்ந்து சொன்னா எப்படி செய்றது என்று கேட்கிறார்.

தொடர்ந்து வாக்குவாதம் நடக்கும் நிலையில், என்னால எதுவும் செய்யமுடியாது. நீங்க என்ன வேணுமானாலும் செய்யுங்க என்று கூறிவிட்டு வேகமாக பாத்ரூம் செல்கிறார். தன்னுடைய அதீத கோபத்தால் பாத்ரூமில் வைக்கப்பட்டிருந்த பூத்தொட்டி உடைகிறார். இந்நிலையில் இதன் தொடர்ச்சியாகவே இரண்டாவது ப்ரோமோவும் வெளியாகியுள்ளது.

அந்த ப்ரோமோவில் கோபமாக இருக்கும் அக்ஷராவிடம் பேசும் அபினய், முடியாது என்றால் சொல்லிவிடு. எதற்காக முடியும் என்று சொல்லிவிட்டு செய்யாமல் இருக்கிறாய் என்று அபினய் கேட்கிறாய். உடனே கோபமாகி பேசும் அக்ஷரா, நான் எங்கே முடியும் என்று சொன்னேன். அறிவு இருக்கா.. இல்லையா என்று கண்டபடி திட்டுகிறார். அந்த நேரத்தில் சிபியும், ராஜூவும் அங்கு வர, அவர்களை பார்த்தவுடன், என்னிடம் நீ பேசாதே கடுப்பாகிவிடுவேன். என் கண்ணு முன்னாடி நிற்காதே என்று சத்தமாக கத்துகிறார். நீங்க இரண்டு பேரும் ரொம்ப ஓவராக பண்ணறீங்க என்று கோபமாக அக்ஷரா கூறுகிறார். அழுது கதறிக்கொண்டு இருக்கும் அக்ஷராவை கன்பெஷன் ரூமுக்கு பிக்பாஸ் அழைப்பது போன்ற வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment