ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அடிபட்ட தொழிலாளருக்கு உதவிய கார்த்தியை வேலையில் இருந்து தூக்க ஆனந்த் திட்டம் போட்ட நிலையில் இரு நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது ஆனந்த் கார்த்தியை வேலையில் இருந்து தூக்க போவதாக சொன்னதும் தொழிலாளர்கள் அவரை வேலையிலிருந்து எடுத்தால் எங்களையும் வேலையிலிருந்து எடுத்து விடுங்க என்று வாக்குவாதம் செய்ய, அப்படியா சரி உங்க எல்லாரையும் வேலையிலிருந்து தூக்கிடுறேன் என ஆனந்த் சொல்கிறான்.
உடனே அருண், ஆனந்தை தனியாக கூட்டிச் சென்று உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருக்கா, எல்லாரையும் வேலையை விட்டு தூக்கிட்டா கம்பெனிக்கு பெரிய லாஸ் ஆகிடும். எடுத்திருக்க ஆடரையும் முடிக்க முடியாம போயிடும் என்று திட்ட, ஆனந்த் வேறு வழி இன்றி கார்த்திக்கை வேலையிலிருந்து தூக்கும் முடிவை கை விடுகிறான்.
பிறகு கார்த்திக் சோர்வாக வீட்டுக்கு வர, தீபா அவனுக்கு கை கால் பிடித்து விடவா என்று கேட்க, கார்த்திக் வேண்டாம் என்று மறுத்ததும் தீபா சோகமாகி வெளியே வர, கார்த்திக் அவளது கையைப் பிடித்து இழுத்து ரொமான்ஸ் செய்கிறான்.
அதன் பிறகு அருண், ஆனந்த், ரியா மற்றும் ஐஸ்வர்யா என நான்கு பேரும் கூட்டு சேர்கின்றனர். கார்த்திகை எதுவுமே பண்ண முடியல என்று அருண் சொல்ல, ரியா இது அவனுக்கு பழக்கப்பட்ட கம்பெனி, அவன் முதலாளி என்பதால் தொழிலாளர்கள் அவனை விட்டுக் கொடுக்காமல் தான் இருப்பார்கள்.
அவனை வேற கம்பெனிக்கு அனுப்பனும் என்று சொல்ல, ரியா சொல்வதும் சரிதான் என யோசிக்கின்றனர். பிறகு அருண் அப்படி எந்த கம்பெனிக்கு அனுப்புறது என்று யோசிக்க, ஆனந்துக்கு ஒரு ஐடியா தோன்றுகிறது. இப்படியான நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ் பண்ணாம பாருங்க.