உனக்கு இந்த வீட்ல இடமில்ல; காதல் கல்யாணம் செய்ய நினைத்த மாயாவுக்கு ரகுராம் வைத்த செக்..

by Editor News

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கிஷோர் மாயாவின் காதல் குறித்து சொல்லி கல்யாணம் செய்து வைக்க போவதாக பேச ரகுராம் காதல் திருமணத்திற்கு இந்த வீட்டில் இடம் இல்லை என்று சொல்லிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, ரகுராம் மாயாவை சந்தித்து நீ காதல் கல்யாணம் பண்ணிட்டு தாராளமா வாழலாம். ஆனால் உனக்கு இந்த வீட்டில் இடம் இல்ல, இந்த விஷயத்தில் உனக்கு ஆதரவா என்னால் எதுவும் செய்ய முடியாது என்று சொல்கிறார். உன்னையும் இந்த வீட்டு பொண்ணா தான் நினைச்சேன். அதை நீயும் நிரூபித்து காட்டி இருக்க. ஆனால் காதல் கல்யாணம் பண்ணா சந்தியா மாதிரி நீயும் வீட்டை விட்டு வெளியே தான் போகணும் என்று சொல்கிறார்.

இதை ஒட்டு கேட்டு விடும் ஷாரு அப்பா லிங்கத்திடம் ஒரு விக்கெட் அவுட்.. மாயா இந்த வீட்டை விட்டு வெளியே போக போறா, அதனால் ரகுராமை ஈஸியா போட்டு தள்ளிடலாம் என்று சொல்லி சந்தோசப்படுகிறாள். இதனை தொடர்ந்து மாயா காதலிக்கிற பையன் சீனுவா இருக்குமோ என்று சந்தேகப்படுகிறாள். வீட்டில் உள்ள மணிவண்ணன் உட்பட எல்லாரையும் ஏற்றி விட்டு கிஷோரிடம் பேச அனுப்புகிறார்.

கிஷோர் இவர்களை புரிந்து கொள்ள சீனுவை தான் மாயா காதலிக்கிறா என்ற உண்மையை சொல்லாமல் மறைக்கிறார். அதன் பிறகு மாயாவை கோவிலுக்கு அழைத்து சென்று உனக்கும் சீனுவுக்கும் கல்யாணம் என்று ஷாக் கொடுக்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

Related Posts

Leave a Comment