கண்கலங்கிய படி பிரபல நடிகரை திருமணம் செய்த நடிகை ரேஷ்மா: ஆனந்த கண்ணீரில் ஷோபனா

by Column Editor

திரையுலகில் தங்களுடன் நடிக்கும் சக நடிகர் நடிகைகளை காதலித்து திருமணம் புரிவது என்பது ஜெமினி கணேசன்- சாவித்திரி அம்மா காலம் முதல் இன்றுவரை தொடர்ந்து தான் வருகிறது. அதிலும் குறிப்பாக வெள்ளித்திரையைக் காட்டிலும் சின்னத்திரையில் தான் அதிகமான ரீல் ஜோடிகள் ரியல் ஜோடி ஆக மாறி வருகின்றன.

அந்த விதமாக சமீபத்தில் செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் ஆரியனை காதலித்து மணந்தார். இவர்களைத் தொடர்ந்து ஏற்கனவே தாங்கள் காதலிக்கிறோம் விரைவில் திருமணம் செய்யப் போகிறோம் என்று பல ரியாலிட்டி ஷோக்களில் சொல்லிய மதன் – ரேஷ்மா ஜோடி, நவம்பர் 15ஆம் தேதி ஆனால் இன்று திருமணம் செய்து கொள்கின்றனர்.

ஜீ தமிழில் ‘பூவே பூச்சூடவா’ சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை ரேஷ்மா. இவர் தனது அக்காவின் கணவர் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் மதனை காதலித்து வந்தார். மதனும் இவரை காதலித்தார். இதனை பல மேடைகளில் மதன் ரேஷ்மா ஜோடிகள் உறுதிப்படுத்தினார்.

தற்பொழுது கலர்ஸ் தமிழ் சேனலில் ‘அபி டெய்லர்’ ௭ன்னும் சீரியலில் மதன் கதாநாயகனாகவும், ரேஷ்மா கதாநாயகியாகவும் நடித்து கலக்கி வருகின்றனர். இந்நிலையில் இந்த ரீல் ஜோடி தங்கள் நிஜ வாழ்க்கையில் ஜோடியாக இணைகின்றனர்.

மேலும் ரேஷ்மா – மதன் திருமணத்தில் திரை பிரபலங்களும் சீரியல் நடிகைகளும் கலந்துகொண்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கின்றன. ரேஷ்மா – மதன் இவர்களது திருமணம் கொண்டாட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு புகைப்படமும் சமூக வலைதளங்களில் அவருடைய ரசிகர்களால் வைரலாக பரவி வருகிறது.

Related Posts

Leave a Comment