”காத்து வாக்குல ரெண்டு காதல்ல” விஜய் சேதுபதி… ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

by Column Editor

விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’. விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இரு ஹீரோயின்கள் இணைந்து நடித்துள்ளனர். காமெடி ரொமான்ஸ் படமாக உருவாகியுள்ள இப்படத்தை விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் லலித் குமார் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

நானும் ரௌடிதான் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியும், நயன்தாராவும் இந்த படத்தில் இணைந்து நடிப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவுபெற்று இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

ஏற்கனவே இப்படத்தின் அனிரூத் இசையில் உருவான இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் சேதுபதி மூன்று படங்களுடன் வெளியாகியுள்ள இந்த போஸ்டருக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதில் ராம்போவில் என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த போஸ்டர் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Related Posts

Leave a Comment