விஜய் தொலைக்காட்சி என்றதும் நமக்கு சில முகங்கள் நியாபகம் வரும், அதில் தொகுப்பாளர்களின் முகங்கள் தான் அதிகம் வரும்.அப்படி விஜய் டிவியின் சொத்து என்று கூறப்படும் தொகுப்பாளினி பிரியங்கா இப்போது பிக்பாஸ் 5வது சீசனில் கலந்துகொண்டிருக்கிறார்.சிலருக்கு அவர் புதிய விஷயத்தில் நுழைந்துள்ளார் எனறு கூறினாலும் அவரது ரசிகர்கள் பலர் பிக்பாஸ் தேவையில்லாத வேலை என கூறி வருகின்றனர்.பிக்பாஸ் நிகழ்ச்சியை வைத்து அவரை பலர் இப்போது விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.அது ஒருபக்கம் இருக்க இப்போது அவரை குறித்து அவ்வளவாக யாருக்கும் தெரியாத தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.பிரியங்கா கௌதம் கார்த்திக் நடித்த தேவராட்டம் என்ற படத்தில் மதுர பளபளக்குது என்ற பாடலில் ரங்கு சிலுக்குதான் சிக்குன்னு சமஞ்சு வந்தாளாம் என்ற வரியை மட்டும் பாடியுள்ளாராம்.இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவ ரசிகர்கள் அட அப்படியா இந்த விஷயம் இப்போ தானே தெரியும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
425