”இனிமேல் எதையும் எதிர்பார்க்க மாட்டேன்” – முட்டிக்கொண்ட பிரியங்கா – இமான்‌ அண்ணாச்சி

by Column Editor

இனி எதையும் எதிர்பார்க்க மாட்டேன் என்று இமான் அண்ணாச்சியிடம் பிரியங்கா சொல்லும் புரோமோ வெளியாகியுள்ளது.

வாரந்தோறும் பிக்பாஸ் வீட்டில் தலைவரை தேர்ந்தெடுப்பது வழக்கம். இந்த நடைமுறை வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று நடைபெறும். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில், பிக் பாஸ் வீட்டில் யார் இந்த வார தலைவராக வரக்கூடாது என்பதை தேர்ந்தெடுக்கும் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் பிரியங்கா, நிரூப், ஐக்கி, சிபி ஆகிய 4 பேர் போட்டியிடுகின்றனர்.

இந்த நான்கு போட்டியாளர்களில் யார் இந்த வார தலைவராக கூடாது என்பதனை சக போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. இந்த நான்கு போட்டியாளர்கள் வரிசையாக நிற்க வைக்கப்பட்டு‌ ஒரு‌ கண்ணாடி குடுவை வைக்கப்படுகிறது. அதில் ஒவ்வொரு போட்டியாளரும் தலைவராக கூடாது என்று நினைப்பவரின் குடுவையில்‌ தண்ணீரை ஊற்றுகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்த இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பேசும் நிரூப், இமான் அண்ணாச்சி என் கைபாவையாக இருப்பதாக பலர் நினைக்கிறார்கள். அது உண்மையில்லை என்று கூறுகிறார். அது உண்மை தானே, அதனால்தான் இமான் அண்ணாச்சியை கடைசியில் வர சொல்லி இருக்கிறாய் என்று பிரியங்கா சொன்னார். பிரியங்காவின் புரிதல் குறைவாக இருக்கிறது என்று அவரின் குடுவையில் தண்ணீரை ஊற்றுகிறார். இது எதிர்பார்த்ததுதான் அண்ணாச்சி. நன்றி என்று பிரியங்கா சொல்லும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment