பிரியங்கா எனக்கு ஃப்ரெண்டே கிடையாது – சீறும் தாமரைச்செல்வி

by Column Editor

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், பிக் பாஸ் வீட்டில் ப்ளூ டிவி, ரெட் டிவி என போட்டியாளர்கள் இரு குழுவாக பிரிக்கப்படுவதாக பிக் பாஸிடமிருந்து உத்தரவு வருகிறது.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் இரண்டாவது சீசனில், இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா, பாடகி சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து ராப் பாடகி ஐக்கி பெர்ரி சமீபத்தில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

அதே நேரத்தில் 3 பேர் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளனர். கடந்த வாரம் அபிஷேக் ராஜா வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தார். அதோடு நடன இயக்குநர் அமீர், நடிகரும் நிகழ்ச்சி தொகுப்பாளருமான சஞ்சீவ் ஆகியோரும் வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், பிக் பாஸ் வீட்டில் ப்ளூ டிவி, ரெட் டிவி என போட்டியாளர்கள் இரு குழுவாக பிரிக்கப்படுவதாக பிக் பாஸிடமிருந்து உத்தரவு வருகிறது. சிங்கத்தின் பிடரியில் ஊஞ்சலாடிய இமான், பிக் பாஸ் வீட்டில் பிரியங்காவின் பரிதாபங்கள் என செய்தி வாசிக்கப்படுகிறது.

அப்போது, “யார் யாரை இந்த வீட்ல நம்பணும், யார் யாரை நம்பக் கூடாதுன்னு எனக்கு இப்போ தான் புரிஞ்சது” என்று கூறுகிறார். பின்னர் பிரியங்காவையும், தாமரையையும் உட்கார வைத்து, ’இவங்க என்ன மாதிரியான ஃப்ரெண்ட் உங்களுக்கு’ என்று கேள்வி எழுப்ப, ‘எனக்கு ஃப்ரெண்டே கிடையாது. நம்ம பேச்சு மட்டும் தான் உயர்ந்திருக்கணும், மத்தவங்க எல்லாம் நமக்கு கீழ தான்னு நினைக்கிறது பிரியங்கா தான். நான் எங்க வேணும்ன்னாலும் சொல்வேன்” என்கிறார் தாமரை.

Related Posts

Leave a Comment