பொது போக்குவரத்து மற்றும் கடைகளில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயம்

by Column Editor

ஓமிக்ரோன் மாறுபாட்டின் பரவலை கட்டுப்படுத்தும் முகமாக பிரித்தானியாவில் பொது போக்குவரத்து மற்றும் கடைகளில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும் வெளிநாட்டில் இருந்து பிரித்தானியா வருபவர்களும் பி.சி.ஆர். பரிசோதனை செய்து, எதிர்மறையான முடிவைப் பெறும் வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓமிக்ரோன் மாறுபாட்டுடன் 11 நோயாளிகள் பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட நிலையில் இந்த புதிய கட்டுப்பாடுகள் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை எதிர்வரும் நாட்களில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சுகாதாரத்துறை செயலாளர் சஜித் ஜாவிட் தெரிவித்தார்.

Related Posts

Leave a Comment