ஒமிக்ரோன் அச்சுறுத்தல்: கிறிஸ்மஸுக்குப் பிறகு இரண்டு வாரம் முடக்கநிலை!

by Column Editor

கிறிஸ்மஸுக்குப் பிறகு இரண்டு வார சர்க்யூட் பிரேக்கர் முடக்கநிலைக்கான திட்டங்களை, அதிகாரிகள் உருவாக்கி வருகின்றனர்.

இதில் உட்புற ஒன்றுகூடலை தடை செய்வது அடங்கும் என்று அண்மைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

வேலை நோக்கங்களுக்காகத் தவிர மற்றவர்கள் வீட்டிற்குள் சந்திப்பதைத் தடைசெய்யும் வரைவு விதிமுறைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் பப்கள் மற்றும் உணவகங்கள் வெளிப்புற சேவைக்கு மட்டுமே இருக்கும்.

ஒமிக்ரோன் தொற்றுப் பரவல் வேகமாக பரவி வருகின்ற நிலையில், இதற்கு மிக விரைவில் கடுமையான நடவடிக்கைகள் கொண்டு வரப்பட வேண்டும் என்று விஞ்ஞானிகள் அமைச்சர்களிடம் கூறியதையடுத்து இந்த நடவடிக்கைகள் நடைமுறைக்கு வரவுள்ளது.

வசந்த காலத்தில் முடக்கநிலையைi எளிதாக்கும் படி ஒன்று மற்றும் இரண்டில் காணப்படும் கட்டுப்பாடுகளுக்கு செல்ல ஆலோசகர்கள் பரிந்துரைத்துள்ளனர். இது உட்புற ஒன்றுகூடல் மற்றும் உட்புற விருந்தோம்பல் மீதான தடையை உள்ளடக்கியது.

லண்டனில் கொவிட் தொற்றுடன் மருத்துவமனையில் உள்ளவர்களின் எண்ணிக்கை, கடந்த ஏழு நாட்களில் தொற்றுகளில் மிகப்பெரிய உயர்வைக் கண்டுள்ளது. கடந்த வாரத்தில் 28.6 சதவீதம் அதிகரித்து 1,534ஆக உயர்ந்துள்ளது.

Related Posts

Leave a Comment